நாம் மறந்துவிடக்கூடாத நாயகர்களில் ஒருவரான, நெய்வேலி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்குப் பின்னால் இருந்த முன்னோடியும், தமிழ் தொழில்துறைக்கான அடித்தளத் தந்தையுமான டி எம் ஜம்புலிங்கம் முதலியார் அவர்களுக்கு நீதியும் நற்பெயருமளிக்கும் வகையில் அரசு நிலைமையிலான நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிட்டு, தமிழ் செம்படைக் கழகம் சார்பாக மூன்று முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன் அவர்களுக்கு
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஷ்ணு பிரசாத் அவர்களுக்கு
இந்தக் கடிதங்களில் கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
NLC India Limited நிறுவன நிர்வாக வளாகத்தில், முழுஉருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம்
NLC நிறுவனத்தின் பெயர் பலகையில், மேற்புறமாக "டி எம் ஜம்புலிங்கம் முதலியார்" என அவரது பெயர் பொறிக்கப்பட வேண்டும்
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்காக வரலாற்றுப் பயணங்களை ஏற்படுத்தும் வகையில், அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் வழியே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தமிழக அரசு செலவில் நினைவு தின விழா ஆண்டுதோறும் நடைபெறும் வகையில் ஏற்பாடு
இந்த மூவரும் தங்கள் துறைகளில் நேரடி பொறுப்பாளர்கள் என்பதாலும், நெய்வேலி மற்றும் கடலூர் மக்களின் நலனுக்காக செயல்படுபவர்களாக இருப்பதாலும், இக்கோரிக்கைகள் அரசியல் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன.
தமிழ் செம்படைக் கழகம்
வரலாற்றை மறக்காத இயக்கம் – இனத்தின் குரலாக
தொடர்புக்கு: 95 97 91 10 62
இணையதளம்: www.tamilredarmy.in
info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.